/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாலுகா அலுவலகங்களில் தினசரி 270 சான்றிதழ்கள் வழங்கல் பீகார் பெண் சாவில் திருப்பம் கணவரே கொன்றது அம்பலம்
/
தாலுகா அலுவலகங்களில் தினசரி 270 சான்றிதழ்கள் வழங்கல் பீகார் பெண் சாவில் திருப்பம் கணவரே கொன்றது அம்பலம்
தாலுகா அலுவலகங்களில் தினசரி 270 சான்றிதழ்கள் வழங்கல் பீகார் பெண் சாவில் திருப்பம் கணவரே கொன்றது அம்பலம்
தாலுகா அலுவலகங்களில் தினசரி 270 சான்றிதழ்கள் வழங்கல் பீகார் பெண் சாவில் திருப்பம் கணவரே கொன்றது அம்பலம்
ADDED : மே 28, 2025 07:22 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள தாலுாக அலுவலகங்களில் மாணவர்களுக்கு தினசரி வருவாய்த்துறை மூலம் 270 சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது.
இதற்காக, மாணவர்கள் வருவாய் துறை மூலம் சாதி, குடியிருப்பு மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் தங்களது பெற்றோர்களுடன் குவிந்து வருகின்றனர்.
இதனால், அனைத்து தாலுகா அலுவலகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், கலெக்டர் உத்தரவின் பேரில், மாணவர்களின் சிரமங்களை தவிர்க்க, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சான்றிதழ் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்களிலும் தினசரி 270 வருவாய் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமில் 300 சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விருத்தாசலம், மே 28-
பீகார் மாநிலம், சமஸ்தீஸ்பூர், சித்துவாகியை சேர்ந்தவர் அரவிந்தகுமார்,27; இவரது மனைவி லட்சுமிகுமாரி, 22; இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 1 வயதில் பெண் குழந்தை, 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்கள் கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பழமலைநாதர் நகர் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி காலை லட்சுமிகுமாரி வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது தெரிந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பெண் சாவில், அவரது கணவர் அரவிந்தகுமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையில், லட்சுமிகுமாரியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அரவிந்தகுமார் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து போலீசார் நேற்று அரவிந்தகுமாரை கைது செய்தனர்.