/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டி சென்னை ஐகோர்ட் நீதிபதி பரிசு வழங்கல்
/
நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டி சென்னை ஐகோர்ட் நீதிபதி பரிசு வழங்கல்
நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டி சென்னை ஐகோர்ட் நீதிபதி பரிசு வழங்கல்
நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டி சென்னை ஐகோர்ட் நீதிபதி பரிசு வழங்கல்
ADDED : ஆக 11, 2025 07:12 AM

புதுச்சேரி : புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் நடந்த, நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்றப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பரிசுகள் வழங்கினார்.
இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில் நடந்த, நுகர்வோர் சட்டம் குறித்த 2வது அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டியில், இந்தியா முழுவதிலிருந்து 69 அணிகள் பங்கேற்றன. நீதித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர். இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியின் முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக, சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன், முன்னாள் நீதிபதி சுப்பிரமணியன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ராஞ்சி தேசிய சட்ட படிப்பு மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக் ஆர் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அதன்படி, முதலிடம் பிடித்த தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ட்ரீசி நிலோபர், ரம்யா விஜய்குமார், அச்சுதா மாணிக்கம் ஆகியோருக்கு, 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வைஷாலி, ராஜா கல்லேஸ்வரி, சமீஹா மரியம் ஆகியோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
மேலும், சென்னை கிரசென்ட் சட்டக் கல்லுாரியின் சிறந்த மாணவி வழக்கறிஞர் ஸ்ரீபிரதாவுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிறந்த மாணவ வழக்கறிஞராக ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அகிலேஷிக்கு 10 ஆயிரம் ரூபாயும், கோயம்புத்துார் அரசு சட்ட கல்லுாரிக்கு சிறந்த எழுது முறை வாதம் வாதுறை பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரி நவீனாவுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
உதவி பேராசிரியர் ஜெயராணி நன்றி கூறினார்.