/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேருக்கு வலை
/
வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேருக்கு வலை
ADDED : ஜூலை 10, 2025 12:00 AM
அரியாங்குப்பம், : வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன், 33. இவர் தவளக்குப்பத்தில் உள்ள வாட்டர் வாஷ் கடையில், வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், பேப்பர் வாங்கி கொண்டு, அப்பகுதியில் உள்ள சாராயக்கடை வழியாக சென்றார். அங்கு நின்ற, சடா நகரை சேர்ந்த ராஜ், இளங்கோ, வினோத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிால், பிரவீனை தாக்கினர்.
காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜ் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.