/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
/
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
ADDED : ஜன 15, 2024 06:50 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்து 385 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி செஞ்சி சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் இளைஞர்கள், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து. சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், உளுந்துார்பேட்டை, வானம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ், 21; என்பதும், அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 110 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும் தெரியவந்தது.
பின்னர், ஆகாஷை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன்படி, ஆகாஷ் அளித்த தகவலின்பேரில், உளுந்தார்பேட்டை பகுதி எஸ். மலையனுாரை சேர்நத ஜெயபிரகாஷ், 24; குன்னதுாரை சேர்ந்த குமாரவேல், 21; ஆகியோரை புதுச்சேரியில் கைது செய்து, அவர்களிடம் இருந்து 275 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.