ADDED : நவ 03, 2025 03:59 AM
புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
மறைமலை அடிகள் சாலை அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சந்தேகமான முறையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், உழவர்கரை மடத்து வீதியை சேர்ந்த ஜெயன் சூசைராஜ், 36, ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த மாலிக், 46, கிருபசிந்து மாலிக், 38, என்பதும், கஞ்சா வைத்திருந்தும் தெரிந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சாவை, பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

