/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
5 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
5 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
5 பேரிடம் ரூ. 1 லட்சம் மோசடி; சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : நவ 03, 2025 04:00 AM
புதுச்சேரி: புது சாரத்தை சேர்ந்த நபர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம் பரத்தை பேஸ்புக்கில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனை யில் பேசிய மர்ம நபர் டென்மார்க் நாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா கட்டணம் செலுத்த கூறியுள்ளார்.
இதைநம்பி, அவர், மர்ம நபருக்கு ரூ. 40 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார். இதேபோல், முதலியார் பேட்டை சேர்ந்தவர் 19,300 ரூபாய், முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் 25,380, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 14,500, உருளையன்பேட்டையை சேர்ந்த பெண் 3,576 என, 5 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 756 ரூபாய் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.