/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லறை தினம் அனுசரிப்பு கிறிஸ்தவர்கள் அஞ்சலி
/
கல்லறை தினம் அனுசரிப்பு கிறிஸ்தவர்கள் அஞ்சலி
ADDED : நவ 03, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லறை தினத்தையொட்டி, கிறிஸ்தவர்கள், இறந்த முன்னோர்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டு, நவம்பர் 2ம் தேதி ஆன்மாக்கள் தினமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த தினத்தையொட்டி, நேற்று புதுச்சேரியில், உள்ள உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், வில்லியனுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடினர்.
இறந்த முன்னோர்களின் கல்லறைகள் முன், மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தினர்.

