/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு, சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் : எஸ்.பி., ஸ்ருதி எச்சரிக்கை

ADDED : நவ 03, 2025 04:33 AM
புதுச்சேரி:  தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு, சிம் கார்டு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.பி., ஸ்ருதி செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற ஆவணங்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தருவது, பணத்திற்கு ஆசைப்பட்டு விற்பது மற்றும் பயன்பாட்டிற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு தரும்பட்சத்தில் சைபர் மோசடி கும்பல் அந்த வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை பயன்படுத்தி சைபர் குற்றங்களில் ஈடுபட்டால், அதனை வாங்கி கொடுத்த தாங்கள் முதன்மை குற்றவாளிகளாக சேர்க்கப்படுவீர்கள்.
மேலும், தற்போது நடக்கும் சைபர் குற்றங்களில் 85 சதவீத குற்றங்கள் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக வருகிறது.
அத்தகைய குற்றங்களில் சைபர் குற்றவாளிகள் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்கவைத்துவிட்டு, அவர்கள் தப்பித்து கொள்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் யாரும் தங்களுடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்கள் மற்றும்  தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி தரவேண்டாம்.
யாரேனும் தங்கள் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி எடுத்து கொடுக்க கூறினால் அதனை தவிர்க்க வேண்டும். மேலும் சைபர் குற்றம் மற்றும் தகவல் சம்பந்தமாக புகார் தெரிவிக்க 1930 மற்றும் 0413 2276144, 9489205246  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.