/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லஞ்ச ஒழிப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்
/
லஞ்ச ஒழிப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்
லஞ்ச ஒழிப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்
லஞ்ச ஒழிப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : நவ 03, 2025 04:34 AM

புதுச்சேரி: டில்லி, மத்திய கண்காணிப்பு ஆணையம் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 27ம் தேதி துவங்கி நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே துவங்கிய மாரத்தான் போட்டியை சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
காந்தி சிலை அருகே துவங்கிய மரத்தான் பழைய சாராய ஆலை, ஓட்டல் அதிதி, ராஜா திரையரங்கம், கம்பன் கலையரங்கம், ரயில் நிலையம், தீயணைப்புத் துறை மற்றும் டூப்ளக்ஸ் சிலை வழியாக காந்தி சிலையில் முடிவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

