ADDED : அக் 18, 2026 12:41 AM
புதுச்சேரி: உருளையன்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் ஆட்டுப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், ஆட்டுப்பட்டு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தனுஷ், 23; தேங்காய்திட்டு, வடக்கு தெருவை சேர்ந்த முகிலன், 23; நைனார்மண்டபம், காளியம்மன் நகரை சேர்ந்த செபாஸ்டின், 18; என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தபோது, 210 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து, விற்பனை செய்து வருவதும் தெரிந்தது.
இதையடுத்து, தனுஷ், முகிலன், செபாஸ்டின் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 3 மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
