ADDED : அக் 18, 2026 12:37 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கவியரசு கண்ணதாசன் இலக்கியக் கழகம் சார்பில் கண்ணதாசனின் 45ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கழகத்தின் தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார். நிறுவநர் கோவிந்தராசு நினைவுரையாற்றினார். செயலர் அருள்செல்வம் வரவேற்றார். பொருளாளர் வீரட்டீசுரன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ரவிக்குமார் நினைவேந்தல் உரையாற்றினார். காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு நிறுவனத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் கார்த்திகேயன் மலர் வணக்கத்தை துவக்கி வைத்தார்.
அமெரிக்காவில் இருந்து பாவலர் குமரவேலு காணொளி வழியாக பா மலர் சூட்டினார். கண்ணதாசனின் உருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
