தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனியார் தொழிற்சாலையில் திருட்டு: ஒருவர் கைது

தனியார் தொழிற்சாலையில் திருட்டு: ஒருவர் கைது

தனியார் தொழிற்சாலையில் திருட்டு: ஒருவர் கைது


ADDED : அக் 18, 2026 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் கம்பெனியில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த கோர்க்கார்ட்டில் இயங்கி வரும் சுந்தரம் பாஸ்டனர்ஸ் கம்பெனி நிறுவனத்தினர், கடந்த செப்., 3ம் தேதி தொழிற்சாலையின் தெற்கு பக்க காம்பவுண்ட் சுவருக்கு அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான 3 செம்பு கேபிள் சுருள்களை வைத்திருந்தனர்.

செப்., 17ம் தேதி பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று செம்பு சுருள்களில் 2 செம்பு கேபிள் சுருள்கள் மாயமாகி இருந்தது. அந்நிறுவனத்தினர் சி.சி.டி.வி., காட்சிகளை பார்வையிட்டபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அந்த செம்பு கேபிள் சுருள்களை திருடி செல்வது தெரியவந்தது.

இதற்கிடையே, கடந்த 14ம் தேதி தொழிற்சாலையின் டி.ஜி., அறையில் இருந்த 7 ஆயிரம் மதிப்புள்ள 2 மீட்டர் நீளம் கொண்ட 2 செம்பு எர்த்ரிங் பட்டைகள் வெட்டித் திருடப்பட்டிருந்தது. அங்கள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக வேலை பார்த்து வரும் ராசுகுட்டி என்பவர், மெட்டல் கட்டர் உதவியுடன் செம்புப் பட்டைகளைத் துண்டித்துத் திருடுவது தெரிந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் சீனியர் நிர்வாகி சுகுமார், நேற்று மங்கலம் போலீசில் சி.சி.டி.வி., காட்சி ஆதரத்துடன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து ராசுகுட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us