/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் வில்லியனுாரில் 3 பேர் கைது
/
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் வில்லியனுாரில் 3 பேர் கைது
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் வில்லியனுாரில் 3 பேர் கைது
சமூக ஆர்வலர் மீது தாக்குதல் வில்லியனுாரில் 3 பேர் கைது
ADDED : ஜன 10, 2025 05:55 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் சமூக ஆர்வலரை தாக்கிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வில்லியனுார், கணுவாப்பேட்டை, மூன்றாவது வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (எ)ரமேஷ், 50; சமூக ஆர்வலர். இவர் மூப்பனார் வணிக வளாகம் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் பகுதியில் பத்திர எழுத்தர் அலுவலகம் வைத்துள்ளார்.
கடந்த 7ம் தேதி மாலை ரமேஷ் அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து, கார்த்திகேயனிடம் ஏன் பிரச்னை செய்கிறாய் என, கேட்டு திட்டி தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
ரமேஷ் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் தில்லைநகரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட அடையாளம் தெரியாத ஏழு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ரமேஷ் மீது தாக்குதல் நடத்திய கனுவாபேட், புதுநகரை சேர்ந்த, கோவர்தன், 29; ஐயப்பன், 24; குகன், 22, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் நடவடிக்கையால் வில்லியனுாரில் நேற்று நடைபெறுவதாக அறிவித்த முழு கடையடைப்பு கைவிடப்பட்டது.

