தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : ஆக 31, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் சமாதானம் மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ. 10.70 லட்சம் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகர்வோர் பூசல்கள் குறைதீர்வு ஆணைய வழிகாட்டுதலின்படி, நுகர்வோர் புகார்களை கால நேரத்திற்குள் தீர்வு காணும் நோக்கில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 9 வழக்குகள் சமாதானத்திற்கு எடுத்து கொண்டு, 3 வழக்குகளில் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது.

அதன்படி, ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், வழக்கறிஞர்கள் சேதுராமன், மோகன் இளையராஜா, முரளி, கலைவாணன், ரமணன் உட்பட சட்ட கல்லுாரி மாணவர்கள், காப்பீட்டு நிறுவன மற்றும் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us