/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 3 நாள் வித்யாரம்பம் நிகழ்ச்சி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 3 நாள் வித்யாரம்பம் நிகழ்ச்சி
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 3 நாள் வித்யாரம்பம் நிகழ்ச்சி
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 3 நாள் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ADDED : செப் 28, 2025 08:03 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சி 3 நாட்கள் நடக்கிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியதாவது:
கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவ பெருமாள் நான்கு வேதங்களையும் பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார் என்பது ஐதிகம். விஜயதசமியன்று ஹயக்ரீவ பெருமாள் சரஸ்வதி தேவிக்கு ஆயக்கலைகள் அறுபத்து நான்கினையும் உபதேசம் செய்தார் என்றும் கூறுவர்.
ஹயக்ரீவ பெருமாள் சரஸ்வதிக்கு உபதேசம் செய்த இந்நாளில் கல்வி கற்க உள்ள குழந்தைகள், ஹரி நமோஸ்து ஸித்தம் என்று நெல் மணிகளில் எழுதி கல்வியை தொடங்கினால் சரஸ்வதி தேவியின் பூரண அருளும், குழந்தைகளுக்கு ஞானமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனால் தான் பள்ளிகளில் புதிய வகுப்புகளை விஜயதசமி நாளன்று தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி வரும் 30ம் தேதி துவங்கி அக்., 2ம் தேதி வரை மூன்று நாட்கள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதுச்சேரியில் நவ நரசிம்மர்களை ஒரு சேர பார்த்து தரிசனம் செய்யும் ஒரே கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.