ADDED : ஆக 03, 2026 04:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்கள் 12 ஜோதி லிங்க தரிசனம் நடைபெற உள்ளது என, இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மனோகர் கூறியதாவது;
12 ஜோதி லிங்கத்தை பார்க்க வேண்டும் என்றால், 7 மாநிலத்தில் இருந்து கல்லை எடுத்து வந்து, திருச்சி சீராதோப்பு பகுதியில் கோவில் ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. தொடர்ந்து, 12 ஜோதிலிங்கத்திற்கு, திருச்சி காவேரி நீரில் இருந்து அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தொடர்ந்து, 12 ஜோதி லிங்கங்களுக்கும் திருவண்ணாமலையில் 3 நாள் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
அங்கிருந்து கொண்டு வரும் 12 ஜோதி லிங்கங்களுக்கு புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி 3 நாட்களுக்கு தரிசனம், 6 கால பூஜைகள் நடக்கிறது. சிவனடியார், ஆன்மிகவாதிகளின் அபிேஷக ஆராதானை நடக்கிறது. காலை முதல் மாலை வரை சிவபுராணம், பாராயணம் நடக்கிறது. புதுச்சேரி மக்கள் பங்கேற்று தரிசனம் செய்யலாம்' என்றார். இந்து முன்னணி புதுச்சேரி தலைவர் சனில்குமார் உடனிருந்தனர்.
