ADDED : ஆக 02, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாண்டி மெரிமான கடற்கரையில் கடலில் இறங்கிய மனநலம் பாதித்த சிறுவனை போலீசார் மீட்டனர்.
புதுச்சேரி, பாண்டி மெரினா கடற்கரையில் நேற்று மதியம் 15 வயது சிறுவன் ஒருவர், கடற்கரை பாறைகள் வழியாக கடலில் இறங்கி சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர காவல் படை போலீசார், லைப் கார்டு ஊழியர்கள் உதவியுடன் அச்சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பித்து வந்ததும், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அச்சிறுவன் ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
