/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா கல்லுாரியில் 3 நாள் பயிற்சி பட்டறை
/
ஆச்சார்யா கல்லுாரியில் 3 நாள் பயிற்சி பட்டறை
ADDED : ஜன 20, 2024 05:57 AM

புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
பயிற்சிப் பட்டறை ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலுடன், கல்லுாரி முதல்வர் குருலிங்கம், இயந்திரவியல் துறைத் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
3டி பிரிண்டிங், லேசர் வேலைப்பாடு, மரம் செதுக்குதல், பி.சி.பி. துருவல், இன்ஜினியரிங் சமீபத்திய போக்குகளைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொண்டனர். நேரடி வேலை மாதிரிகளை அனுபவிப்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.
பயிற்சி பட்டறையை புதுச்சேரி வெக்டர் சொலியூஷன் பயிற்றுனர்கள் நடத்தினர். ஏற்பாடுகளை ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குழு தலைவர் ஆனந்த், வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகப்ரியா ஆகியோர் செய்திருந்தனர்.