/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடி குத்தி கொலை நண்பர்கள் 3 பேர் கைது
/
ரவுடி குத்தி கொலை நண்பர்கள் 3 பேர் கைது
ADDED : அக் 05, 2025 11:16 PM

புதுச்சேரி:ரவுடியை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் அப்பு (எ) பிரதாப்,26; ரவுடியான இவர், நேற்று முன்தினம் காலை லாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தில் தலை மற்றும் மார்பு பகுதியில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், அவரது நண்பர்களான கருவடிக்குப்பம் வினோத்,30; பெத்துசெட்டிபேட் பழனிமுருகன்,23; சண்முகாபுரம் கிருஷ்ணகுமார் ஆகியோர் பிரதாப்பை அடித்து, பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில், மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், வினோத் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி இரவு மூவரும், லாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடியபடி, மது அருந்தினர்.
அப்போது, பழனிமுருகன் தனது காதலியை பார்த்துவிட்டு வர, பிரதாப்பிடம், பைக் கேட்டார். அப்போது, பிரதாப், பழனிமுருகனின் காதலியை பற்றி தவறாக பேசினார். ஆத்திரமடைந்த பழனிமுருகன் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து பிரதாப்பை பீர்பாட்டிலால் குத்தியும், கட்டையால் அடித்தும் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பழனிமுருகன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.