தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை சங்கராபுரம் அருகே துணிகரம்

ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை சங்கராபுரம் அருகே துணிகரம்

ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை சங்கராபுரம் அருகே துணிகரம்


ADDED : பிப் 19, 2025 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை மற்றும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவம் மக்களை அச்சமடைய செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துாரை சேர்ந்தவர் பாஸ்கரன், அரசு பள்ளி ஆசிரியர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை எஸ்.குளத்துார் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவர் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

மேலும், இவரது பக்கத்துவீடான ஸ்ரீராமன் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவை ஆராய்ந்ததில் பணம், நகை இல்லாததால் அதற்கடுத்த வீடான செல்வி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

மேலும், இதே பகுதியில் துணை பி.டி.ஓ., சுப்ரமணியன் மற்றும் சுமதி ஆறுமுகம், தேவபாண்டலத்தில் அமுதா ஆ கியோரது வீட்டின் கதவு பூட்டை உடைக்க முடியாததால் திரும்பி சென்றுள்ளனர்.

சங்கராபுரம் அருகே ஓரே நாள் இரவில் அடுத்தடுத்து 6 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் ஆகியோர் கொள்ளை சம்பவங்கள் நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்த புகார்களின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மெயின் ரோடு மற்றும் 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலையில் உள்ள வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us