ADDED : பிப் 21, 2024 11:21 PM
அரியாங்குப்பம், : அரசு பெண்கள் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம், மணவெளி பகுதி அரசு பெண்கள் பள்ளி அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் அப்குதியில் சோதனை நடத்தினர். பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற மூன்று வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில், முருங்கப்பாக்கம் திவாகர், 21; அரியாங்குப்பம் தனுஷ், 21; பிரகதீஸ்வரன், 21, என தெரியவந்தது. மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 90 கிராம் கஞ்சா மற்றும் 3 மொபைல் போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.