பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
ADDED : மார் 21, 2026 07:04 PM

திருக்கனுார்: செல்லிப்பட்டில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சிலர் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் கத்தியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், கொடுக்கூர், சன்னியாசியப்பன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் மகன் குணசேகரன், 23; கூடப்பாக்கம். அம்பேத்கர் தெருவை சேர்ந்த சதாசிவம் மகன் தொல்காப்பியன்,22; கலித்திரம்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஷ்குமார் மகன் ஆனந்தராஜ், 20; என, தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 கத்திகள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
