/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபட்டில் கஞ்சா கடத்திய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
/
மொபட்டில் கஞ்சா கடத்திய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
மொபட்டில் கஞ்சா கடத்திய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
மொபட்டில் கஞ்சா கடத்திய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : ஆக 02, 2025 06:52 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் மொபட்டில் கஞ்சா கடத்தி வந்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 215 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று டி.வி.நகர், பாரதி வீதி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக அதிவேகமாக மொபட்டில் வந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, 215 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசார ணை நடத்தியதில், கோவிந்த சாலை, கண் டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஜெயமூர்த்தி, 28; மற்ற இருவரும் 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக் கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த 215 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 கத்திகள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயமூர்த்தியை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்; சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

