/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : ஏப் 02, 2025 03:55 AM

பாகூர் : பல்வேறு இடங்களில் பைக் திருட்டில் ஈடுபட்டு, தப்பிச் செல்ல முயன்ற சிறுவன் உள்ளிட்ட 3 பேரை, பாகூர் போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
பாகூர் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குருவிநத்தம் பெரியார் நகர் சந்திப்பு வழியாக அதிவேகமாக சென்ற மூன்று பைக்குகளை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றனர்.
பின் போலீசார் அவர்களை தேடியபோது புதருக்குள் மறைந்திருந்த மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், வேலுார் மாவட்டம் சைதாப்பேட்டை சுருட்டுகாரன் தெருவை சேர்ந்த ரமேஷ் 24; பொன்னேரி பகுதியைச் சேர்ந்த திருமலை 20; மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
மேலும், சென்னையிலிருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வந்த இவர்கள் விடுதியில் தங்கி புதுச்சேரியை சுற்றி பார்த்து விட்டு, சென்னை புறப்பட தயாரான நிலையில், புதுச்சேரி கடற்கரை பகுதி, கரிக்கலாம்பாக்கம், பாகூர் ஆகிய இடங்களில் மூன்று பைக்குகளை திருடி கொண்டு, குருவிநத்தம் பெரியார் நகர் வழியாக தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இது குறித்து பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் வழக்குப் பதிவு செய்து, மூன்று பேரையும் கைது செய்து , பைக்குளை பறிமுதல் செய்தனர். பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இருவரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைத்தனர். இதில், ரமேஷ், திருமலையின் மீது, வேலூர் சென்னை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.

