UPDATED : அக் 13, 2026 05:15 PM
ADDED : அக் 13, 2026 04:46 PM
கதிர்காமம் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கதிர்காமம் பகுதியில், டி நகர் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கனகன் ஏரிப் பகுதியில் மூன்று வாலிபர்கள் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் தப்பி செல்ல முயன்ற மூன்று பேரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர்கள் வில்லியனுார் பாஸ்கர் மகன் மிட்டாய் மணி,20, தட்டாஞ்சாவடி ரவிக்குமார் மகன் கிேஷார் ஆண்டனி,19; சரணவன் மகன் புனிதன், 20; என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர். இதில், மிட்டாய் மணி, கிேஷார்குமார் ஆகியே இருவர் மீதும் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.
