தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புற்று நோய் பாதித்த இளைஞர் தற்கொலை

புற்று நோய் பாதித்த இளைஞர் தற்கொலை

புற்று நோய் பாதித்த இளைஞர் தற்கொலை


UPDATED : அக் 13, 2026 04:29 PM

ADDED : அக் 13, 2026 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:29 PM ADDED : அக் 13, 2026 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புற்று நோயால் அவதிப்பட்ட வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் சக்திவேல்,43; இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், பேசமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப்போட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சக்திவேல் மனைவி ரேவதி புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us