தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது

வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது

வில்லியனுார் நர்ஸ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது

1


UPDATED : அக் 13, 2026 02:41 AM

ADDED : அக் 13, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 02:41 AM ADDED : அக் 13, 2026 02:37 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே நர்ஸ் படுகொலை வழக்கில் கலைக்குமாருக்கு உதவிய மேலும் ஒரு கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த கோபாலன்கடை தனுஷ்கோடி மகள் ஜெயஸ்ரீ,22; . இவர் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரவுடி குமார்(எ)கலைக்குமாரை காதலித்து வந்தனர். இந்நிலையில் கலைக்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததால் ஜெயஸ்ரீ கதலை கைவிட்டார்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கலைக்குமார் தனது கூட்டாளியின் உதவியுடன் பேசுவதற்கு ஜெயஸ்ரீயை அழைத்தனர். அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி மாலை வீட்டில் இருந்த ஜெயஸ்ரீயை வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஜெயஸ்ரீ வெட்டி படுகொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பொறையூரை சேர்ந்த லோகேஷ்வரன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கலைக்குமார், சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் தேடிவந்தனர்.

இதற்கிடையில் கடந்த 30ம் தேதி காட்பாடியில் ரயில்முன் பாய்ந்து கலைக்குமார் தற்கொலை செய்துகொண்டார். உடன் சென்ற கோபாலன்கடையை சேர்ந்த சதீஷ்குமாரை கடந்த 2ம் தேதி உளுந்துபேட்டையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலைக்கு பிறகு தலைமறைவான கலைக்குமாருக்கு அடைக்கலம் கொடுத்து, காட்பாடிக்கு செல்ல உதவிய அவனது கூட்டாளி தவளக்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை மகன் கிச்சா(எ)ஹரிகிருஷ்ணன்,21; இவரை . நேற்று காலை அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us