தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு

பஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு

பஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு


UPDATED : அக் 13, 2026 02:11 AM

ADDED : அக் 13, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 02:11 AM ADDED : அக் 13, 2026 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, திருவள்ளுவர் நகர், செட்டிகுளம் தெருவை சேர்ந்தவர் விஷ்வா ஆதித்யா, 23 ;. இவர் நேற்றிரவு 9:30 மணிக்கு தந்தை வீரவளவனை வெளியூருக்கு அனுப்பி வைப்பதற்காக புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பின், விஷ்வா ஆதித்யா மறைமலையடிகள் சாலையில் பஸ் நிலையம் எதிரேயுள்ள தனியார் ஒயின்ஷாப் அருகே நின்றிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 2 பேர் திடீரென கத்தியால் விஷ்வா ஆதித்யாவை சரமாரியாக வெட்டினர். சுதாரித்து கொண்டு விஷ்வா ஆதித்யா தப்பி ஓடியபோது, விரட்டி சென்ற இருவரும் அவரின் கால் மற்றும் தோள்பட்டையில் வெட்டியுள்ளனர்.

அங்கிருந்த தப்பி ஓடிய விஷ்வா ஆதித்யா உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்று தஞ்சமடைந்தார். ரத்தக் காயங்களுடன் வந்த வாலிபரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முன் விரோதம் காரணமாக கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஸ்ரீதர், நைனார்மண்டபத்தை சேர்ந்த மாதேஷ் ஆகியோர் இணைந்து விஷ்வா ஆதித்யாவை கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us