ADDED : அக் 13, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே கடல் பகுதியில் நேற்று இரவு 11 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் கரை ஒதுங்கிய நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
