ADDED : செப் 27, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: திருபுவனை பகுதியில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூராக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை ஏ.எஸ்.ஐ.,க்கள் பட்டாபிராமன், ஞானசேகரன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாண்டார்கோவில் ஓம்சக்தி ஓட்டல், கொத்தபுரிநத்தம் சாலையில் தனியார் ஒயின்ஷாப் மற்றும் கலிதீர்த்தாள்குப்பம் ஜெ.எம்.ஜெ., கார்டன் ஆகிய பகுதிகளில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூராக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட மதகடிப்பட்டுபாளையம் வெங்கடாஜலபதி 55; ரஜபுத்திரபாளையம் கோபி 48; விழுப்புரம் துருவை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் 28; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
