காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு, சாய் சரவணன்குமார் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு, சாய் சரவணன்குமார் ஓட்டு சேகரிப்பு
ADDED : செப் 27, 2026 05:42 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, சாய் சரவணன்குமார் ஆகியோர் அவ்வை நகர் பகுதியில் ஓட்டு சேகரித்தனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி காங்., வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து, எம்.எல்.ஏ.,கள் நேரு, சாய் சரவணன்குமார் நேற்று அவ்வை நகர், லாஸ்பேட்டை மெயின் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
நேரு எம்.எல்.ஏ., கூறுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் புதிய ரேஷன் கார்டு, சிகப்பு ரேஷன் கார்டு மாற்றுதல், மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் பெறவேண்டிய சலுகைகள், முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர், முதிர்கன்னி உதவித்தொகைகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள், திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பெறவேண்டிய சலுகைகளை பெற எங்கு சென்றீர்கள்.
எம்.எல்.ஏ., கையொப்பம் பெற என்ன பாடுபட்டிருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும். கடந்த தேர்தலில் போட்டியிட்ட விநாயகம், மேற்சொன்ன அனைத்து பணிகளையும் உங்களுக்காக செய்து கொண்டிருக்கிறார்.
அரசு துறைகளில் பெறவேண்டிய சலுகைகள் ஏதேனும் தடைபட்டால், மக்களை அலைகழிக்கப்பட்டால் அந்த அலுவலகங்களில் போராட்டங்கள் நடத்தி தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் விநாயகம் பெற்று தருவார்.
தற்போது உங்களை தேடி வருபவர்கள், பணத்தைக் காட்டி ஆசை காட்டுவர்கள். மக்களே உங்களுக்கு பணம் வேண்டுமா, உழைக்கக்கூடிய, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் வேண்டுமா என சிந்தித்து கை சின்னத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்றார்.
ஓட்டு சேகரிப்பின் போது, மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
