/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ. 4.56 லட்சம் இழப்பு
/
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ. 4.56 லட்சம் இழப்பு
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ. 4.56 லட்சம் இழப்பு
சைபர் மோசடி கும்பலிடம் 3 பேர் ரூ. 4.56 லட்சம் இழப்பு
ADDED : ஆக 10, 2025 08:45 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து 2 பேர் ரூ. 3.87 லட்சம் ஏமாந்தனர்.
மண்ணாடிப்பட்டு நபரை, தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிகம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார். அது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றிலும், அவரை இணைத்தார். வாட்ஸ் ஆப் குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு அதிக அளவில் லாபப் பணம் வருவதாக பதிவிட்டு உள்ளனர்.
இதைநம்பி, மர்ம நபர் தெரிந்த ஆன்லைன் டிரேடிங்கில் 2 லட்சத்து 52 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அதற்கான லாப பணத்தை எடுக்க முயன்றபோது, பணத்தை எடுக்க முடியவில்லை. அதன் பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், முத்தியால்பேட்டை சேர்ந்த நபர், போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து 1 லட்சத்து 35 ஆயிரம், திருபுவனையை சேர்ந்தவர் 69 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.