/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.4.33 லட்சம் 'அபேஸ்' :சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
3 பேரிடம் ரூ.4.33 லட்சம் 'அபேஸ்' :சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
3 பேரிடம் ரூ.4.33 லட்சம் 'அபேஸ்' :சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
3 பேரிடம் ரூ.4.33 லட்சம் 'அபேஸ்' :சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : டிச 31, 2025 03:27 AM
புதுச்சேரி: 3 பேரிடம் ரூ. 4.33 லட்சம் ரூபாயை ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த நபர் ஆன்லைனில் வேலை தேடினார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் முன்பணம் செலுத்தி, ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதனையடுத்து, அவர் மர்ம நபருக்கு 4 லட்சத்து 15 ஆயிரத்து 696 ரூபாயை அனுப்பினார். பின் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல் காலாப்பட்டை சேர்ந்த நபர் 12 ஆயிரத்து 500 ரூபாய், புதுச்சேரி நபர் 5 ஆயி ரம், என, மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 196 ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.