தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது


ADDED : அக் 31, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டி. நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று (அக்.,30) மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக 2 பைக்குகளில் வந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து பைக்கை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் கோரிமேட்டைச் சேர்ந்த மனோகர் மகன் சரத்குமார், 27; ஆலங்குப்பம் மஞ்சனி மகன் சசிதரன், 28; சவுந்தராஜன் மகன் ஸ்ரீபிரியன், 23, ஆகியோர் என்பதும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், 112 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 பைக், 3 மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இன்று (அக்.,31) காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us