/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்சில் சென்ற பெண்ணின் நகை பணம் திருடிய 3 பேருக்கு வலை
/
பஸ்சில் சென்ற பெண்ணின் நகை பணம் திருடிய 3 பேருக்கு வலை
பஸ்சில் சென்ற பெண்ணின் நகை பணம் திருடிய 3 பேருக்கு வலை
பஸ்சில் சென்ற பெண்ணின் நகை பணம் திருடிய 3 பேருக்கு வலை
ADDED : செப் 27, 2024 05:01 AM
புதுச்சேரி: சென்னை அம்பத்துார் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள்,73; இவரது மனைவி பிருந்தாவதி, இவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி, கடலுாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு புதுச்சேரிக்கு வந்தனர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற பஸ்சில் ஏறினர்.
அப்போது, பஸ் இந்திரா சிக்னல் சென்ற போது, அடையாளம் தெரியாத 3 நபர்கள் பஸ்சில் ஏறினர். அவர்கள் வைத்திருந்த பையில் இருந்து, சில்லரை காசுகளை கீழே போட்டனர். பஸ்சில் நின்ற பிருந்தாவதி, கீழே விழுந்த காசுகளை எடுத்து, அந்த நபர்களுக்கு உதவி செய்தார். பஸ் ராஜிவ் சிக்னலில் பஸ் நின்றபோது மர்ம நபர்கள் 3 பேரும் பஸ்சில் இருந்த இறங்கி சென்று விட்டனர்.
பஸ் இ.சி.ஆர் சிவாஜி சிலை அருகே சென்ற போது, அப்பெண் தான் வைத்திருந்த கைப்பையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பையில் நெக்லஸ், வளையல் உள்ளிட்ட 7 சவரன் தங்க நகைகளை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார்.
இது குறித்து, கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, நகை பணம் திருடி சென்ற மர்ம நபர்கள் 3பேரை தேடிவருகின்றனர்.