தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயம்

மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயம்

மின்சாரம் தாக்கி 3 பெண்கள் காயம்


ADDED : நவ 06, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான மின்சாரம் மூலம் இயங்கும் கொசு மருந்து உதிரிபாகங்கள் அசம்பிள் செய்யும் கம்பெனி உள்ளது.

இந்த கம்பெனியில் இன்று (நவ.,6) காலை 6:30 மணியளவில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி மூன்று பெண்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த டி நகர் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். கம்பெனிக்கு மின்சப்ளை செய்யும் கம்பத்தில் திடீரென உயர்மின் அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக கம்பெனியிலும் ஓவர் லோடாகி மின்கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

காயமடைந்த அரும்பார்த்தபுரம் ராஜலட்சுமி,39;சுப்பையா நகர் ஜமுனாராணி,36; குமரகுருபள்ளம் வாணி,26; ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us