sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிளஸ் 1 சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு முதல் நாளில் 303 மாணவர்களுக்கு இடம்

/

பிளஸ் 1 சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு முதல் நாளில் 303 மாணவர்களுக்கு இடம்

பிளஸ் 1 சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு முதல் நாளில் 303 மாணவர்களுக்கு இடம்

பிளஸ் 1 சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு முதல் நாளில் 303 மாணவர்களுக்கு இடம்


ADDED : ஆக 08, 2025 02:17 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குருசுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கிய பிளஸ் 1 சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வில் 303 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்காக விண்ணப்பித்து இடம் கிடைக்கப்பெறாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இறுதி வாய்ப்பாக சிறப்பு கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.

குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி துவக்கி வைத்தார்.

இதில், பள்ளி துணை முதல்வர்கள் சண்முகம், கார்த்திகேயன், கலியமூர்த்தி, ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த பிளஸ் 1 சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில் 303 பேருக்கு உடனடியாக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று (8ம் தேதி) மற்றும் 11ம் தேதி பிளஸ் 1 சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.

இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us