/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3.47 லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு ரூ. 3 ஆயிரம் பொங்கல் பரிசு: ரூ.104 கோடி வங்கி கணக்கில் வரவு வைப்பு

ADDED : ஜன 15, 2026 07:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3.47 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ. 104 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் ரொக்க பரிசு கொடுக்கப்பட்டது. புதுச்சேரியில் அதை தாண்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு கொடுக்க என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி அரசு முடிவு செய்தது.
ஆனால், புதுச்சேரி அரசிடம் போதிய நிதி இல்லாத நிலையில் மத்திய அரசின் கதவை தட்டியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் மனு கொடுக்கப்பட்டது.
மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. ஒருவழியாக தமிழகத்தை போன்று 3 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, நிதி துறையின் ஒப்புதலை கொடுத்ததை தொடர்ந்து 14ம் தேதிக்குள் அனைவரது வங்கி கணக்கில்பொங்கல் பரிசினை செலுத்த குடிமை பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வந்தது. முடிவு செய்தப்படியே மதியம் 1 மணி முதல் அனைவரது வங்கி கணக்கில் பொங்கல் ரொக்க பரிசு 3 ஆயிரம் ரூபாய் விழுந்தது.
இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் உள்ள 3.47 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அரசு முடிவு செய்து அறிவித்தது.
அதன்படி, மாநிலத்தில் உள்ள 3.47 லட்சம் ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 104 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, துறை அமைச்சர் திருமுருகன் உத்தரவில்பேரில் திட்டமிட்ட 14ம் தேதிக்குள் அனைவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது' என்றனர்.