/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தோர் 3.5 லட்சம் பேர்: பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தகவல்

ADDED : ஜன 01, 2024 05:55 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர் என, பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசினார்.
புதுச்சேரி பா.ஜ.,விற்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகளின் முதல் கூட்டம், ஓட்டல் அண்ணாமலையில் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.,தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.,ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முத்ரா திட்டம், இலவச காஸ் திட்டம் என அனைத்து திட்டங்களும் ஏழை மக்களை சென்றடைந்துள்ளது. புதுச்சேரியில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.
அவர்களை சந்தித்து, லோக்சபா தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். அதற்கு ஏற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். புதுச்சேரியில் பா.ஜ.,வேட்பாளர் தான் நிற்பார். எனவே பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் அனைவரும் இரவு பகலாக உழைக்க வேண்டும்.
லோக்சபா தேர்தலில் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பா.ஜ.,வை பலப்படுத்த வேண்டும். மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சி மலரும்போது நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டது.