/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
360 டிகிரி கண்காணிப்பு கேமரா சீனியர் எஸ்.பி., ஆய்வு
/
360 டிகிரி கண்காணிப்பு கேமரா சீனியர் எஸ்.பி., ஆய்வு
360 டிகிரி கண்காணிப்பு கேமரா சீனியர் எஸ்.பி., ஆய்வு
360 டிகிரி கண்காணிப்பு கேமரா சீனியர் எஸ்.பி., ஆய்வு
ADDED : நவ 15, 2025 10:48 PM

புதுச்சேரி - கடலுார் சாலையில், 360 டிகிரி கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது குறித்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
போக்குவரத்து போலீஸ் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் புதுச்சேரி - கடலுார் சாலையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், சாலையில் சென்டர் மீடியனாக வைக்கப்பட்டிருந்த மஞ்சல் நிற இரும்பு பாரல்களை பார்வையிட்ட அவர், அவை நகர்ந்து விடாமல் இருக்க, தண்ணீர் நிரப்பி வைக்க அறிவுறுத்தினார்.
மேலும், சாலையில் முக்கிய இடங்களிலும், விபத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும், முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பிள்ளையார்குப்பம், கன்னியக்கோவில், முள்ளோடை, விழுப்புரம் - நாகை புறவழிச்சாலையில் சோரியாங்குப்பம் புதிய பாலம் மற்றும் பின்னாட்சிக்குப்பம் - பாகூர் சாலை சந்திப்பு பகுதியில் புதிதாக 360 டிகிரி கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

