/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுக்கடை உடைத்து சேதம்: 4 பேர் கைது
/
மதுக்கடை உடைத்து சேதம்: 4 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2025 08:03 AM
புதுச்சேரி : மதுக்கடையில் கேஷியரை தாக்கி, மது பாட்டில்களை சேதப்படுத்திய, சேலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியை சேர்ந்த தேவராஜ், 26, இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு கடந்த 19ம் தேதி, வேனில் சுற்றுலா வந்தனர்.
நோணாங்குப்பம் தனியார் விடுதியில் தங்கியிருந்தவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டனர்.
முதலியார்பேட்டை நுாறடி சாலையில், தனியார் மதுக்கடையில் மது வாங்கி குடித்தனர்.
கடையில் குடிக்க கூடாது என கடையில் இருந்த கேஷியர், ராஜசேகர் அவர்களிடம் கூறினார்.
அதில், ஆத்திரமடைந்த தேவராஜ், அவருடன் வந்த வெங்கடேஸ்வரன், 26, சஞ்சஜ், 24, ஜிவா, 20, ஆகியோர் சேர்ந்து கேஷியரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர், கடையில் இருந்த மது பாட்டில்கள், கண்ணாடி டேபிளை சேதப்படுத்தினர்.
கேஷியர்புகாரின் பேரில், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, தேவராஜ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.