தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வெடிகுண்டுடன் வந்த 4 பேர் சிக்கினர்

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வெடிகுண்டுடன் வந்த 4 பேர் சிக்கினர்

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வெடிகுண்டுடன் வந்த 4 பேர் சிக்கினர்


ADDED : நவ 26, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாதுகாப்பு ஒத்திகையில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை வெடிகுண்டு வீசி தாக்க வந்த 4 பேரை பெரியக்கடை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை இணைந்து, இரண்டு நாட்கள் சீ விஜில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நேற்று துவங்கியது.

இதையொட்டி, அரவிந்தர் ஆசிரமம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், அவ்வழியாக சந்தேகப்படும் படி வந்த 4 பேரை பிடித்து, விசாரணை நடத்தினர்.

அவர்களின் பேக்கில் வெடிகுண்டு (டம்மி) வைத்திருந்ததும். அரவிந்தர் ஆசிரமத்தை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரை கைது செய்து, ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், பாதுகாப்பு ஒத்திகைக்காக தீவிரவாதிகள் போர்வையில் அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்ததும், அதில் 2 பேர் சுங்கத்துறை ஆய்வாளர்கள் என்பதும், 2 பேர் இந்திய கடற்படை வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us