UPDATED : நவ 20, 2026 05:46 PM
ADDED : நவ 20, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுபாட்டு ஆலோசகர் சூரியகுமார், பள்ளிக்கு 100 மீட்டர் தொலைவிற்குள் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக டி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், வெங்கடேஸ்வரா நகர் ஆட்டோ ஸ்டேன்ட் அருகில் புகையிலை பொருட்கள் விற்ற சாரம், ராஜேஸ்வரி,43; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அதேபோல் பெரியகடை போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். செஞ்சி சாலையில் புகையிலை பொருட்கள் விற்ற நேரு நகர் கிருஷ்ணவேணி,36; முத்தியால்பேட்டை ஜானகிராமன்,56; லாஸ்பேட்டை சரவணன்,47; ஆகியோரை கைது செய்தனர்.
