தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு ஊழியரை கத்தரிக்கோலால் குத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு

அரசு ஊழியரை கத்தரிக்கோலால் குத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு

அரசு ஊழியரை கத்தரிக்கோலால் குத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : நவ 07, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருநள்ளாறு, கருக்கன்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி ராஜேஸ்வரி, 43; வட்டார அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புத்தக காப்பாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று (நவ.,6) அலுவலகத்தில் உள் தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பறவைபேட்டையைச் சேர்ந்த அல்லிராணி என்பவர் ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுப்பட்டார்.

அவருடன் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த கிருபா மனைவி சுமதி, 29, அவரது சித்தி வசந்தி, 42, பாட்டி ஜெயம் ஆகியோரும் ராஜேஸ்வரியிடம் தகராறு செய்தனர்.

ஆத்திரமடைந்த சுமதி கத்தரிக்கோலால் ராஜேஸ்வரியின் வலது காதில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். காயம் அடைந்த ராஜேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுக்குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சுமதி, வசந்தி, அல்லிராணி, ஜெயம் ஆகியோர் மீது திருநள்ளாறு சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us