தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவரை தாக்கிய 4 பேருக்கு வலை

 டிரைவரை தாக்கிய 4 பேருக்கு வலை

 டிரைவரை தாக்கிய 4 பேருக்கு வலை


ADDED : ஜன 14, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர், புதிய காமராஜர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் 28; டிராக்டர் டிரைவர். இவர், கடந்த 11ம் தேதி பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் உள்ள தனியார் ரெஸ்டோ பாரில் மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு வந்த அதேப் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர், தமிழரசனிடம் , தனது நண்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோகன், அருகில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து தமிழரசன் தலையில் அடித்தார்.

படுகாயமடைந்த தமிழரசன், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின், நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பாகூர் துாக்குபாலம் அருகே, மோகன் மற்றும் அவரது நண்பர்கள், தமிழரசனை வழிமறித்து தடியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த தமிழரசன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது புகாரின் பேரில், மோகன், ஸ்ரீராம், விஷ்ணு, பார்த்தா ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us