ADDED : டிச 13, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம், 18, சிவரஞ்சித், 20, ஆகிய இருவரும் மடுகரையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த மடுகரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு பகுதியில் குடிபோதையில் தகராறு செய்த விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரத்தை சேர்ந்த காசிநாதன், 31, வி.புதுக்குப்பம் காளி கோவில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.