ADDED : அக் 29, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
பெரியக்கடை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, நீடராஜப்பையர் வீதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், புட்லுார் தீபக்ராஜா,20, என்பவரை கைது செய்தனர்.
காலாப்பட்டு போலீசார் நேற்று (அக்.,28) கனகசெட்டிக்குளம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மது போதையில், ரகளையில் ஈடுபட்ட கந்தாடு வினோத்,35, என்பவரை கைது செய்தனர்.
மாகே போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, பொது இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக ரகளை செய்த, ஒடிசா, பாலேஸ்வர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ், 34, என்பவரை கைது செய்தனர்.
பள்ளூர் போலீசார் நேற்று சோக்லி–பரல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட, கேரளம் வடகரா பகுதியை சேர்ந்த சனில்,25, என்பவரை கைது செய்தனர்.
