தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த 10 பேர் மீது வழக்கு பதிவு

ரகளை செய்த 10 பேர் மீது வழக்கு பதிவு

ரகளை செய்த 10 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : அக் 29, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.நகர் போலீசார் நேற்று (அக்.,28) ரோந்து சென்றனர். கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட, கவுண்டன்பாளையம் முருகன்,52; கோரிமேடு துரை,48; கூடப்பாக்கம் தமிழரசன்,33; கதிர்காமம் சசிகரன்,30; ராமகிருஷ்ணன்,25; சாரம் பரணிதரன்,43, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை இ.சி.ஆரில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஜீவானந்தபுரம் திவாகர்,39; குமரன், 24, மற்றும் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பொது இடத்தில் மது அருந்திய தட்டாஞ்சாவடி பிரகாஷ், 36; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று மூலகுளம் தனியார் பார் அருகே ரோந்து சென்றபோது, அப்பகுதியில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரைப்பாளையம் மணிவண்ணன் மீது வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us