ADDED : நவ 11, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் போலீசார் நேற்று (நவ.,10) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட குச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் 28; பாதிரிக்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் 52; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, பரிக்கல்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார், முதுநகரை சேர்ந்த பாலமுருகன், 51; மணப்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட கன்னியக்கோவிலை சேர்ந்த இளம்பரிதி, 38; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
