ADDED : மார் 30, 2026 06:41 PM
புதுச்சேரி: உருளையன்பேட்டையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 4 பேரை ஊரில் நுழைய தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, சட்டசபை தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி தேர்தல் எந்தவித அசம்பவிதமும் இன்றி அமைதியாக நடக்கும் பொருட்டு, உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், குற்றப்பின்னணி உடைய நெல்லித்தோப்பு, பெரியார் நகர், முருகன் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்த் (எ) சின்ன அரவிந்தன், ஆட்டிப்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த விஷ்ணு, ரோட்டியார்பேட், முருகசாமி தோட்டத்தை சேர்ந்த சக்திவேல், ஆட்டுப்பட்டி, அம்பேத்கர் நகரசை் சேர்ந்த சுனில் (எ) கிஷோர் குமார், ஆகிய 4 பேரையும் நேற்று முதல் ஒரு மாத காலத்திற்கு ஊரில் நுழையத் தடை விதித்து கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்கள் உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
